ரணில் நாளை புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவிப்பிரமாணம்!

0
104

ranilஇலங்கையின் புதிய அரசாங்கத்தின் அடுத்த பிரதமராக, ரணில் விக்ரமசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.   ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 38 வருட கால நாடாளுமன்ற பின்னணியைக் கொண்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 1993ஆம் ஆண்டு முதலாவது தடவையாக பிரதமராக பதவியேற்றார்.

நாளைய தினம் அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதோடு நான்கு தடவைகள் பிரதமர் பதவி வகிக்கும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை தனதாக்கிக்கொள்வார்.   நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியானது 106 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. அத்துடன், ரணில் 5 இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், மக்களின் ஆணைக்கேற்ப நல்லாட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, அனைவரையும் ஒன்றிணைத்து இரண்டு அல்லது 3 வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here