தாம் எதிர்பார்த்த மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு வழங்காவிடினும் அந்த மாற்றத்தினை அடைவதற்கு தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.
தமக்கு வாக்களித்த மக்களுக்கும் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நன்றி தெரிவித்தார்.
மேலும், மக்கள் தமக்கு வழங்கிய வாக்குகளுக்காக தொடர்ந்தும் தாம் நேர்மையாக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.