அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் – மஹிந்த!

0
95
mahinthaaமக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2015 பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுள்ள இம்முடிவை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.
“இத்தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் அதுபோன்று தேர்தல் நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது உழைத்த எமது ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தேர்தலில் பெற்றுள்ள மக்களின் முடிவிற்கு அமைய, அரசியலில் தொடர்ந்தும் இருப்பதற்கும், பாராளுமன்றத்தில் அமர்ந்து நான் இதுவரை நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் செய்து வந்த சேவையினை தொடர்ந்தும் செய்வேன் என இச்சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here