மகனைத் தேடியலைந்த தாய் ஒருவர் உயிரிழப்பு!

0
112

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, பூம்புகார் கல்மடுவைச் சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது-78) என்ற தாயே உயிரிழந்துள்ளார்.

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் (வயது-38) 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தொடர்ச்சியாகத் தேடி வந்த இவர், வவுனியால் ஆயிரத்து 799 நாள்களாக நடத்தப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார்.
இந்தநிலையில், தனது மகனைக் காணாமலேயே அவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here