பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் வானை பிளக்க இன்று காலை பத்து மணிக்கு நல்லூர்க் கந்தனுக்கு கொடியேறியது. இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயர் தேசங்களில் இருந்தும் நல்லூர் கந்தனின் அருள் பெற பக்தர்கள் படையெடுத்து வருவது வழமையாகும்.
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது. மேலும் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்டை செய்து தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றியதுடன் தொடர்ந்தும் 25 நாட்களுக்கு திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.