தனது பேரனை கண்டு பிடித்துத் தருமாறு பாட்டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சூர நகர் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆறுமுகம் தர்மவதி என்ற பாட்டியே இவ்வாறு உணவின்றி,உறக்கமின்றி அழுது புலம்புகிறார்.
21 வயதுடைய மாணிக்கராசா மதுசாந் என்ற இளைஞன் வறுமை காரணமாக 09 ஆம் திகதியன்று கொழும்பு வெள்ளவத்தைக்கு தனது உறவினர்களுடன் கூலி வேலைக்காக சென்றுள்ளார். மனநலம் பாதிக்கபட்டவரான இவர் சிகிச்சை பெற்றுவந்ததால் ஓரளவு நோய் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் பொங்கல் தினத்திற்கு மறுநாளான 15 ஆம் திகதியன்று வெளியில் சென்றவேளை காணமல் போயிருந்தார். இவரை காணவில்லையென தேடியபோது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து 16 ஆம் திகதி இரவு மீட்டுள்ளனர். பின்னர் அவரை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல முச்சக்கரவண்டியில் ஏற்றுவதற்கு முயற்சித்தபோது, அவர்களை தள்ளிட்டு ஓடி மறைந்துள்ளதாக அவரை கொழுப்பிற்கு அழைத்துச் சென்றவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கண்டுபிடித்து தருமாறு வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் திருகோணமலை அலி ஒலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இவர் 02 வயது நிரம்பிய நிலையில் தாயார் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பேரப்பிள்ளையான மதுசாந்தை அவரது பாட்டியே பாராமரித்து வந்துள்ளார்.
இவரை கண்டவர்கள் 0766794093 மற்றும் 0766794093 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்கின்றனர்.