யாழில்.தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழப்பு!

0
253

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திரசிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை தொட்டிலடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் கஜூரன் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் போக்கே உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here