தங்கள் நிதி ஆதாரங்கள் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் தம் வாக்குறுதிகளில் சிலவற்றையாவது தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆணையாளர் பிலிப்போ கிரண்டி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பெண்களும் சிறுமிகளும் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக “டோலோ நியூஸ்“ தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் சொத்துக்களில் சுமார் 10 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியதோடு இஸ்லாமிய எமிரேட் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.