கல்வி அமைச்சர் மீது புகார்கள்
பிரான்ஸில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் மீண்டும் பணி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் இந்த வாரமும் வியாழக்கிழமை பாடசாலைகள்
கல்லூரிகள் (les écoles, collèges et lycées) என்பன செயலிழக்கும் என்று எதிர்பார்க்
கப்படுகிறது.
ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் இணை
ந்து பெற்றோருக்கான சங்கமும் மாண
வர் இயக்கமும் அன்றைய தினம் அரசு
க்கு எதிராகப் பேரணிகளை நடத்துமா
றும் அழைப்புவிடுத்துள்ளன. பாடசாலை
களில் அரசு நடைமுறைப்படுத்திவருகி
ன்ற ‘கோவிட்’ சுகாதார விதிகளுக்கு எதிர்
ப்புத் தெரிவித்தும் பாடசாலைகளுக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் நிதி ஒதுக்கீடு
கள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதை
வலியுறுத்தியுமே இரண்டாவது வாரமாக
ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
கடந்த வியாழனன்று நடந்த வேலை நிறு
த்தத்துக்குப் பிறகு அரசுக்கும் தொழிற்
சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடை
யில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன.
அதன் பிறகு பிரதமரும், கல்வி அமைச்
சரும் வழங்கிய உறுதி மொழிகள் காத்
திரமானவையாக இல்லை என்று சில
தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி உள்
ளன. அதேசமயம் தற்போதைய கல்வி
அமைச்சர் Jean-Michel Blanquer பாடசாலை
களில் அமுல் செய்துவருகின்ற வைரஸ் தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் மிகவும்
குழப்பம் நிறைந்தவையாக உள்ளன
என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு
வருகின்றன. மிக அதிக எண்ணிக்கை
யான சிறு பிள்ளைகளும் மாணவர்களும்
ஒமெக்ரோன் தொற்றுக்கு இலக்காகி
வருவதால் நாட்டின் கல்வி நிர்வாகம்
கடந்த சில நாட்களாகக் குழப்ப நிலை
யை அடைந்துள்ளது.
நத்தார் விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி
தொடக்கத்தில் பாடசாலைகள் ஆரம்பித்த
சமயத்தில் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer புதிய சுகாதார விதிகளை ஆரம்ப நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு
முன்பாகவே திடீரென வெளியிட்டிருந்
தார். அவரது அந்தக் கடைசி நேர அறிவி
ப்புப் பாடசாலை நிர்வாகங்களுக்குப்
பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.
கல்வி அமைச்சர் மத்திய கடல் தீவுகளில்
ஒன்றாகிய Ibiza தீவில் விடுமுறையைக்
கழித்த நிலையிலேயே அங்கிருந்தவாறு புதிய சுகாதார விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்தத் தகவல் ஊடகம் ஒன்றினால் உறுதிப்
படுத்தப்பட்டதை அடுத்து அவர் மீது ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.
கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தில் பாடசாலைச் சுகாதார விதி
முறைகள் தொடர்பில் சுகாதார அமைச்
சர் ஒலிவியே வேரன் கல்வி அமைச்சரு
டன் முகத்துக்கு நேரே வாக்குவாதத்தில்
ஈடுபட்டார் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்
டிருந்தன. ஆயினும் அரசாங்கப் பேச்சா
ளர் கப்ரியேல் அட்டால் கல்வி அமைச்சர் மீது அரசின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
குமாரதாஸன். 18-01-2022
பாரிஸ்.