இரண்டு வார கால சட்ட வாதங்களுக்குப்
பின்னர் தடுப்பூசிப் பாஸ் பிரேரணைக்கு
நாடாளுமன்றம் நிரந்தர ஒப்புதல் அளித்
திருக்கிறது. நேற்று மாலை நடைபெற்ற
வாக்கெடுப்பில் ஆதரவாக 215 வாக்கு களுடனும் எதிராக 58 வாக்குகளுடனும் பிரேரணை நிறைவேறியதை அடுத்து அதனை உடனடியாகவே எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவ
டிக்கைகளை எடுத்துள்ளது.
முதல் இரண்டு தடுப்பூசிகளையும் இரண்
டாவது ஊசி ஏற்றி நான்கு மாதங்களுக்
குப் பின்னர் மூன்றாவது டோஸ் ஏற்றியி
ருப்பதையும் தடுப்பூசிப் பாஸ் சட்டம் கட்
டாயமாக்குகின்றது. (தற்போது இந்தக்
கால இடைவெளி ஏழு மாதங்கள் ஆகும்.)
இப்போது புழக்கத்தில் இருக்கின்ற சுகா
தாரப் பாஸுக்குப் பதிலாகவே இந்தத்
தடுப்பூசிப் பாஸ் அமுலுக்கு வருகிறது.
16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உண
வகங்கள், அருந்தகங்கள், விளையாட்டு
அரங்குகள்,பொழுது போக்கு மையங்கள்
போன்ற பொது இடங்களுக்குச் செல்வ
தற்கு இனிமேல் தடுப்பூசிப் பாஸ் அவசி
யம்.விமானம், ரயில், மற்றும் பொதுப்
போக்குவரத்துகளுக்கும் அது கட்டாயம்
ஆகின்றது.
இனிமேல் சுகாதாரப் பாஸ் செயலிழப்
பதால் தொற்று இல்லை என்பதை நிரூ
பிப்பதற்கு வைரஸ் சோதனைச் சான்று
றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியாது.12-15
வயதுக்கிடைப்பட்டவர்கள் மாத்திரமே
சுகாதாரப் பாஸைத் தொடர்ந்து பயன்ப
டுத்தலாம்.
எனினும் ஒருசில அவசர நிலைமைக
ளின் போது தடுப்பூசிப் பாஸ் இல்லாத
ஒருவர் வைரஸ் பரிசோதனைச் சான்றி
தழ்களைப் பயன்படுத்த சட்டம் இடமளிக்
கிறது. தடுப்பூசி ஏற்றாமல் போலியான
ஆவணங்கள் மூலம் தடுப்பூசிப் பாஸை
முறைகேடாகப் பயன்படுத்துவோர் மிகக்
கடுமையான முறையில் தண்டிக்கப்படு
வதற்கும் இச்சட்டம் இடமளிக்கிறது.
தடுப்பூசிப் பாஸைப் பரிசோதிக்கின்ற உணவகம் போன்ற நிறுவனங்களது நிர்
வாகிகளும் அதற்கான பணியாளர்களும்
சந்தேகம் ஏற்படும் இடத்து ஒருவருடைய
படத்துடன் கூடிய அடையாள ஆவணங்க
ளை ஒப்பிட்டுப் பரிசோதித்து உறுதிப்படு
த்துவதற்கும் புதிய சட்டம் அதிகாரம் வழங்குகின்றது.
ஒருவர் மற்றொருவரது தடுப்பூசிப் பாஸை முறைகேடாகவோ அல்லது போலியாகத் தயாரித்த பாஸையோ பயன்படுத்தியது தெரியவந்தால் முதல் முறை அவருக்கு ஆயிரம் ஈரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.தொடர்ச்சியான குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறையும் 75 ஆயிரம் ஈரோக்கள் வரையான அபராதமும் தண்டனை
யாக வழங்கப்படலாம். தற்சமயம் சுகாதா
ரப்பாஸை முறை கேடாகப்பயன்படுத்து
வோரிடம் முதல் தடவையில்135 ஈரோக்கள் மட்டுமே தண்டமாக அறவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
குமாரதாஸன். 17-01-2022
பாரிஸ்.