தைத்திருநாள் தமிழர் வாழ்வியலில் மேன்மைமிகு திருநாள்; தமிழ்ப்புத்தாண்டாக, தைப்பொங்கலாக தமிழர் வாழ்வோடு இணைத்திருக்கும் பெருநாள்.
தைத்திருநாள் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும்; நம்பிக்கை விதைக்கும்; உறவுகளை இணைக்கும். இந்நாளில் தமிழர்தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிவழியும்.
பகலவனுக்கு நன்றிபகரும் இத்திருநாளில் தமிழ்மொழியின் விருத்திக்காய் அர்ப்பணிப்புடன் இணைந்திருக்கும் தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் நன்றிநிறை வாழ்த்துக்களைக் கூறிமகிழ்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு.