இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

0
387

திருவள்ளுவர் ஆண்டு 2053
“தமிழன் மாண்புற வாழ தமிழன் வரலாறு அறிந்து தமிழராக பெருமையுடன் வாழ்வோம் “

கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட தமிழ் நாட்காட்டி!

தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத் தமிழ்க் குடிகளால் கையாளப்பட்டு வந்த தமிழ் நாட்காட்டியை தற்காலத்திற்கேற்ப வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார் கிளிநொச்சியைச் சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா.

தொன்மத் தமிழரின் நாட்காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது நிழல் அரச நின்வாகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையில் இருந்துள்ளது. தமிழரது சரித்திர நிகழ்வுகள், நினைவு கூரப்படவேண்டிய நிகழ்வுகள் மற்றும் உலக விடயங்களைத் தாங்கியதாக தமிழ் நாட்காட்டி 2009ஆம் ஆண்டு காலத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டது.

இதனடிப்படையிலேயே கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரராசா குறித்த நாட்காட்டியை புதிய வடிவில், இதில் தமிழ்த் தேசிய நிகழ்வுகள் மற்றும் உலகின் முக்கியமான விடயங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்காட்டியில் தமிழரது மாதங்கள் மற்றும் நாள்கள் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எண் தமிழ் மாதங்கள் சமற்கிருதம் திரிபு மாதங்கள்:

. சுறவம் – புனர்தை – தை
2. கும்பம் – மகசி – மாசி
3. மீனம் – பல்குணா – பங்குனி
4. மேழம் – சைத்திரம் – சித்திரை
5. விடை – வைசாகி – வைகாசி
6. ஆடவை – மூலன் – ஆனி
7. கடகம் – உத்திராடம் – ஆடி
8. மடங்கல் – அவிட்டம் – ஆவணி
9. கன்னி – புரட்டாதி – புரட்டாசி
10. துலை – அகவதி – ஐப்பசி
11. நளி – கிருத்திகா – கார்த்திகை
12. சிலை – மிருகசீரச – மார்கழி

இந்த திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2053. ( 2022+31=2053)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here