தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி யாழில் விடுதலைப் பொங்கல்!

0
364

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்று காலை 10 மணிக்கு விடுதலைப் பொங்கல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறும் இந்நிகழ்வு, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (12)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் இதனைத் அறிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை  கொண்டாடவிருக்கின்ற வேளையிலே தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும், விடுதலைப் பொங்கலுக்கு மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.கடந்த காலத்தில் ஒருசில அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவை பெரியளவில் காட்டப்பட்டன.ஆனால் அதற்குப் பின்னர் எதுவும் நடக்கவில்லை .

கடந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை புதிய ஆண்டிலாவது இடம்பெற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here