பிரான்ஸ் பாடசாலை விதிகளில் மாற்றங்கள்; வகுப்பில் ஒருவருக்குத் தொற்றா?

0
128

ஏனையோருக்கு இனி 3 சுய பரிசோதனை (self-tests)

பெற்றோரை அழைத்து வீட்டுக்கு
அனுப்புவதும் அவசியம் இல்லை

ஒமெக்ரோன் தொற்றுக்கள் கல்வி
நிர்வாகத்தின் மீது பெரும் சுமையாகி
வருவதால் பாடசாலைகளில் சில கட்டுப்
பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசு தீர்
மானித்துள்ளது.

அதன்படி வகுப்பில் தொற்று ஏற்பட்டால்
தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு
மூன்று சுய பரிசோதனைகளைச்(negative self-tests) செய்தால் போதுமானது. அவர்கள் தொடர்ந்து பாடசாலை செல்ல முடியும்.பிசிஆர் பரிசோதனை அவசியம் அல்ல.

சுய பரிசோதனைகளை தாங்களாக வீடு
களிலோ அல்லது பாடசாலையில் வழங்
கப்படுகின்ற சான்றிதழுடன் மருந்தகங்
களில் இலவசமாகவோ செய்து கொள்ள
முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பில் தொற்று என்றதும் பெற்றோ
ருக்கு அறிவித்து வரவழைத்து இடையில்
மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் இனிமேல் அவசியம் அல்ல.பாடசாலை முடிவடையும் வரை அவர்கள் அங்கேயே
தங்கியிருப்பதைப் பாடசாலை நிர்வாகங்
கள் கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜீன் காஸ்ரோ இந்தத் தளர்வு
களை அறிவித்திருக்கிறார். தற்போது
உள்ள நடைமுறையின் படி தொற்றாள
ருடன் தொடர்புடைய மாணவர்களுக்கு
(les élèves cas contacts) ஒரு பிசிஆர் அல்லது அன்டிஜென் சோதனையும்
(PCR or antigen) நான்கு நாள்களுக்குள்
இரண்டு சுய பரிசோதனைகளும் (self-
tests) செய்யப்படவேண்டும் என்பது விதி
ஆகும். அது பெற்றோருக்கும் மாணவரது
கல்வி நடவடிக்கைகளுக்கும் சுமையாக
வும் இடையூறாகவும் இருப்பதாகச் சுட்
டிக்காட்டப்படுகிறது. அதனாலேயே
மாணவருக்கான வைரஸ் சோதனை
விதிகளை அரசு மாற்றியிருக்கின்றது.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பள்ளிச்
சிறுவர்கள் தொற்றுடன் தொடர்புபட்டு
வருவதால் பெற்றோர்கள் தங்கள் வேலைகளைக் கைவிட்டு இடை நடுவில்
அவர்களை அழைத்துக் கொண்டு மருந்
தகங்களுக்கும் பரிசோதனை நிலையங்
களுக்கும் முன்பாக நீண்ட வரிசைகளில் போய் நிற்கின்ற நிலை காணப்படுகிறது

குமாரதாஸன். பாரிஸ்.
11-01-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here