சைப்பிரஸில் “டெல்ராக்ரோன்” கலப்புத் திரிபுத் தொற்றுக்கள்!

0
404

டெல்ரா மற்றும் ஒமெக்ரோன் திரிபு
கள் இரண்டினதும் மரபுகள் இணைந்த
புதிய கொரோனா வைரஸ் திரிபு ஒன்
றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்
ளனர் என்ற தகவலை சைப்பிரஸ் நாட்
டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழு
வெளியிட்டிருக்கிறது.

சுமார் 25 பேருக்கு அந்தக் கலப்பு வைரஸ்
தொற்று ஏற்பட்டிருப்பதை சைப்பிரஸ்
பல்கலைக்கழகத்தின் உயிரியல்
தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூற்றியல்
துறைத் தலைவர் (head of the Laboratory of Biotechnology and Molecular Virology) லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ்
(Leondios Kostrikis) தெரிவித்திருக்கிறார்.

ஒமெக்ரோனை ஒத்த மரபியல் அடையா
ளங்களும் (genetic signatures) டெல்ரா
வின் மரபணுக்களும் (delta genomes)
இணைந்து காணப்படுகின்ற அந்தத் திரிபுக்கு அவர்கள் “டெல்ராக்ரோன்”
(deltacron) எனப் பெயரிட்டிருக்கின்றனர்.
அது வேகமாகப் பரவக் கூடிய ஆபத்தான திரிபாக மாறக் கூடுமா என்பது இனி
மேல் தான் தெரியவரும்.

மேலதிக ஆய்வுகளுக்காக அந்தக் கலப்
புத் திரிபு பாரிஸ் பஸ்தர் நிறுவனத்திட
மும், மரபணுக்களை வரிசைப்படுத்து
கின்ற சர்வதேச GISAID நிறுவனத்திடமும்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட கலப்பு வைரஸ் தொற்றுத்தான். ஒன்றுக்கு மேற்பட்ட
திரிபுகள் பெருமெடுப்பில் பரவும் போது
இவ்வாறு கலப்பு மரபு கொண்ட வைரஸ்
தொற்றுக்கள் நிகழ வாய்ப்புண்டு என்று
தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்
றனர்.உலகெங்கும் டெல்ரா,ஒமெக்ரோன்
இரண்டும் பரந்த அளவில் ஆக்கிரமித்துப்
பரவியுள்ளதால் அவற்றின் மத்தியில்
கலப்புத் திரிபுகள் உருவாக வாய்ப்புகள்
அதிகம் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலில் அண்மையில் கர்பிணிப்
பெண் ஒருவருக்கு வைரஸ் சளிக் காய்ச்சல் மற்றும் ஒமெக்ரோன் வைரஸ்
இரண்டும் ஒரே நேரத்தில் பீடித்திருந்த
மையை மருத்துவர்கள் கண்டறிந்திருந்
தனர்.

பிரான்ஸின் மத்தியதரைக் கடலுடன் அண்டிய மார்செய் பிராந்திய மருத்துவ
மனை நிர்வாகத்தினர் அண்மையில்
புதிய திரிபு ஒன்றைக் கண்டறிந்தனர்.
மார்செய் பல்கலைக்கழக மருத்துவ
மனையின் பெயரில் (Marseille University Hospital-IHU) அது IHU திரிபு என்று அழைக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
09-01-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here