“நரகத்தின் வாயிலில்” எரியும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் முடிவு!

0
89


50 ஆண்டு ஒளிரும் நெருப்பின் கதை

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள பாலை
வனப் பிரதேசத்தில் உல்லாசப் பயணி
களைக் கவருகின்ற ஓர் இடம் உள்ளது.
அங்குள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில்
இயற்கை வாயு வெளியேறித் தொடர்ந்து
எரிந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று அல்ல. தொடர்ந்து சுமார் ஐம்பது
ஆண்டுகளாக எரிகின்ற அதிசயம் அது.

டர்வாசா பள்ளம் (Darvaza crater) என்று அழைக்கப்படுகின்ற அந்த நெருப்புப்
பள்ளத் தாக்கு கரகம் பாலைவனத்தில்
(Karakum Desert) அமைந்திருக்கிறது.
உள்ளூர் மக்கள் அதனை “நரகத்தின் வாயில்”(Gateway to Hell) என்று அழைக்
கின்றனர். ஆபத்தான மீத்தேன் வாயு கிளம்புவதால் அதனை நரகம் என்று
எண்ணுகின்றனர். ஆனால் அது துர்க்
மெனிஸ்தானுக்கு வருகின்ற வெளி
நாட்டவர்களைக் கவருகின்ற ஓர் இட
மாக மாறிப் பிரபலம்பெற்றது. இரவு
களில் பாலைவனக் காற்று தீயை முளாசி
எரியப் பண்ணும் சமயங்களில் அந்தத்
தீக் கிடங்கு ஒளிர்ந்து பிரகாசிக்கும்.அக்
காட்சியைக் காணப் பலர் அங்கு கூடுவர்.
2018 இல் அதன் செல்வாக்குக் கருதி அந்நாட்டின் அதிபர் அதற்குக் “கரகம் பாலைவனத்தின் பிரகாசம்”(“Shining of Karakum”) என்று பெயர் சூட்டினார்.

2013 ஆம் ஆண்டு கனடா அகழ்வாராய்ச்
சியாளரும் இயற்கை அனர்த்தப் பகுதி
களுக்குள் சாகசங்கள் புரிபவருமாகிய ஜோர்ஜ் குரோனிஸ் (George Kouronis)
என்பவர் பரிசோதனை முயற்சியாக
இந்த நெருப்புப் பள்ளத்தின் அடி ஆழம்
வரை இறங்கிச் சாதனை புரிந்தார்.

சுமார் 70 மீ. ஆழமும் 30 மீற்றர் அகலமும்
கொண்ட பாரிய கிடங்கும் உள்ளேயிரு
ந்து வெளியேறி எரிகின்ற இயற்கை வாயுவும் எவ்வாறு அங்கு உருவாகின என்பது தெளிவின்றிமர்மங்கள் நிறைந்த பின்னணியாக உள்ளது.1971 இல் துர்க்
மெனிஸ்தான் சோவியத் ஒன்றியத்தி
னுள் இணைந்திருந்த காலகட்டத்தில்
நிகழ்ந்த ஒரு விபத்தின் காரணமாகவே
அந்த நெருப்புப் பள்ளம் தோன்றியது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் பாலைவனத்தில்
நடத்தப்பட்ட எண்ணெய் அகழ்வு ஆராய்
ச்சி ஒன்றின் போது தற்செயலாக நிகழ்ந்த விபத்தினால் தரைப்பகுதி இடிந்து வீழ்ந்து அங்கு பெரும் ஆழக் குழி ஏற்பட்டது என்றும் அதிலிருந்து ஆபத்
தான எரியும் வாயு வெளியேறியதால்
அதனை எரித்து அழித்துவிடலாம் என்று கருதி அவர்கள் தாங்களாக மூட்டிய தீயே இன்றைக்கும் தொடர்ந்து எரிந்துகொண்
டிருப்பதாகத் துர்க்மெனிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். சில நாட்களில் எரிந்து
தானாக அணைந்து விடும் என்று நம்பி
மனிதன் இயற்கையில் மூட்டிய தீயே
இந்த”டர்வாசா பள்ளம்” (Darvaza crater).

சுற்றுச் சூழலுக்கும் அயல் பிரதேசங்க
ளில் வசிப்போரது சுகாதாரத்துக்கும்
கேடு விளைவிக்கின்ற இத் தீயை நிரந்
தரமாக அணைத்துவிட வேண்டிய நட
வடிக்கைகளை எடுக்குமாறு நாட்டின்
சக்தி மிக்க ஆட்சித் தலைவர் குர்பங்குலி பெர்டிமுகமடோவ் (Gurbanguly Berdymukha
medov) உத்தரவிட்டிருக்கிறார். நாட்டின்
மக்களுக்குப் பயன்பட வேண்டிய இயற்கை வளம் பல தசாப்தங்களாக
வீணாக எரிந்து அழிந்து வருகிறது
என்று அவர் கவலை தெரிவித்திருக்
கிறார்.அங்கு தீயை நிரந்தரமாக அணை
ப்பதற்கு எத்தகைய பொறிமுறை கையா
ளப்படவுள்ளது என்பது இனிமேல்தான் தெரியவரும்.

            -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                      09-01-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here