திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 07.01.2022 வெள்ளிக்கிழமை அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் பிரதி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.