நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்ச வம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மையினை பேண வெளிவீதியை பக்தி மயமாக வைப்பதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நல்லூர் தேவஸ்தானத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் மஹோற்சவம் நாளை ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன.
அந்தணர்கள், பணியாட்கள், பக்தர்களின் உதவியால் ஒவ்வொரு முறையும் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பக்தியை வளர்ப்பதற்காக பல்வேறு புனிதத்துவமான செயற்பாடுகளை தேவஸ்தானம் நிறைவேற்றி வரு கின்றது.
அந்த வகையில் இம்முறை சுவாமி வலம்வரும் வெளி வீதியைப் பக்தி மயமாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அதில் வெளி வீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் விளம்பரங்கள் என் பன தடை செய் யப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்தி லான துணிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த எல்லை பக்தர்களின் மனதை ஒருமுகப்படுத்தி பக்தியை அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இம்முறை நல்லூர் ஆலயச் சூழலில் நடைபாதை வியா பாரம் முற்று முழுதாகத் தடை செய் யப்பட்டுள் ளது. இதற்குப் பொலி ஸார் முழு ஒத்துழைப்பு வழங்கு வதாக கூறியுள்ளார்கள்.அத்துடன் அனைத்து மக்களும் சமம் என வேறுபாடின்றி கலந்து கொள்ளும் ஒரேயயாரு கோவிலாக நல்லூர் கந்தசுவாமி கோவில் காணப்படுகின்றது.
அனைத்துப் பக்தர்களின் பங்க ளிப்பினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ச்சனைப் பற்றுச் சீட்டை ஒரு ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.
வழமை போன்று குறிக்கப்பட்ட நேரத்திற்குள் திருவிழாக்கள் நடை பெறும்.
வெளியில் இருந்து வரும் பக்தர் கள் மிகவும் பக்திபூர்வமாக பெரு மானின் சிந்தனையுடன் ஆலய எல்லைக்குள் வலம்வரவேண்டும் என்பதுடன் கடந்த முறை திருவி ழாவைவிட வெகுசிறப்பாக இம் முறை திருவிழா நடைபெறுவதற்கு பக்தர் கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நல்லூர் ஆலய தேவஸ்தானத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Home
ஈழச்செய்திகள் நல்லூர்க்கந்தனின் மஹோற்சவம் நாளை ஆரம்பம் ஆலய வளாகத்தில் தூய்மையை பேணுமாறு அறிவித்தல்!