யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் தங்க நகைகள் திருட்டு!

0
323

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண்மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்று (06)  சிகிச்சையின் நிமித்தம் , “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது , தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் வளையல் ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் வைத்து சென்றுள்ளார். திரும்பி வந்து கைப்பையினை பார்த்தபோது , அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று, வைத்தியசாலை நிர்வாகத்திடம்  முறையிட்டுள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கமைய  பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர்  பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ,வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here