மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 22 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நேற்று 05.01.2022 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.