வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடந்த கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. அடியார்களின் அரோஹரா கோசத்தின் மத்தியில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் கொடியை ஏற்றி வைத்தார்.
காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தனியார் மினி பஸ்கள் மற்றும் இலங்கை போக்ககுவரத்து சபையின் பஸ்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுபட்டன.