புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார் . கோண்டாவில் – தில்லை யம்பதியை சேர்ந்த யாழ் . இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்றுவரும் யோகராசா யோகீசன் வயது – 17 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார் . புத்தாண்டு தினமான நேற்று கோண்டாவிலைச் சேர்ந்த 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று சுற்றுலாவாக காரை நகர் கசூரினா கடற்கரைக்கு சென்றிருந்தது .
இவர்கள் கடலில் குளித்துக் கொண் டிருந்தபோது இரு இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றது . இளைஞர்களின் உதவிக்குரல் கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த கடற்படையினர் ஓர் இளைஞரைக் காப்பாற்றினர் . மற்றைய இளைஞரை அப்பகுதி மீனவர்களும் சேர்ந்து நெடு நேரம் தேடினர் . நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன .