சுசில் – அநுராவுக்கு இடைக்கால தடை; செயலாளர் பதவிகள் பறிப்பு!

0
274

6780ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்­னயாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிறேமஜயந்த ஆகியோர் தமது செயலாளர் பதவிகளை எதிர்வரும் 28-ம் திகதி வரை வகிக்க முடியாதபடி நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள் மீது கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே கட்சி தலைமையினால் இம் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் செயலாளர் பதவியில் இருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய லாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவும் நீக்கப் பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக துமிந்த திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் செய லாளராகவும், விஸ்வ வர்ண பால ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலா ளராகவும் நியமிக்கப்பட்டுள் ளார்கள்.
கட்சியின் யாப்பு அடிப்படை யில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர் மானம் எடுக்கப்பட்டதாக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன் றத்தில் தெரியப்படுத்தப்பட் டது.
துமிந்த திசாநாயக்க மற் றும் விஸ்வ வர்ணபால ஆகி யோர் தமது பணிகளை முன் எடுத்து செல்ல தடை ஏற்படுத்த கூடாது என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்த வேளை யில் இந்த விடயம் வெளியா னது.
இந்தநிலையில், மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பணிகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவை விதித்தது.
அத்துடன் புதிய பதில் செயலாளர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் விஸ்வ வர்ணபாலவின் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுர பிரியதர் ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு உத் தரவிட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவி யிலிருந்து தம்மை நீக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜ யந்த மற்றும்; அனுர பிரியதர் ஷன யாப்பா ஆகியோர் தெரி வித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற் றுக் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஆகியனவற்றின் அனுமதியின்றி பதவிகளிலி ருந்து தம்மை நீக்க முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here