
யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று (30) மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (30) காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் மாலை வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.https://0fc29988f8c3a4ee9963e91a057b12c9.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.