யாழில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
219

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 25/12/2021 அன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாமனிதரின் திரு உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here