
வருடத் தொடக்கத்தில் நாடு பெரும்
சமூகக் குழப்பத்தைச் சந்திக்கலாம்
அறிவியல் நிபுணர் குழு எச்சரிக்கை
ஒமெக்ரோன் பெரிதாக அறிகுறிகள்
ஏதும் இன்றி அனைவருக்கும் தொற்று
கின்றது.அது வரும் வாரங்களில் லட்சக்
கணக்கானோருக்குத் தொற்றக்கூடிய ஏதுநிலை காணப்படுவதாக மதிப்பிட்
டிருக்கும் அறிவியல் நிபுணர்கள் குழு, அது புதுவருட ஆரம்பத்தில் நாட்டில்
பெரும் குழப்பங்களைத் (désorganisation de la société) தோற்றுவிக்கலாம் என்று எச்சரித்திருக்கிறது.
பெரும் தொற்று நோயின் ஆரம்பம் முதல்
சுகாதார விடயங்களில் அரசுக்கு ஆலோச
னைகளை வழங்கி வருகின்ற அறிவியல்
நிபுணர் குழுவின் (le Conseil scientifique)
தலைவர் ஜோன் பிரான்ஷுவா டெல்பி
ரெய்ஸி(Jean-François Delfraissy) இன்று பாரிஸில் நடத்திய செய்தியாளர் சந்திப்
பில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளா
குவதால் அவர்கள் பணிகளில் இருந்து
விடுப்புப் பெறவேண்டிய நிர்ப்பந்தம்
(multiplication des arrêts et de l’absentéisme) ஏற்படும். அது பல்வேறு பணிகளையும்
சேவைகளையும் நேரடியாகப் பாதிக்கும்.
அதனால் பெரும் பணிக் குழப்பங்கள்
உருவாகலாம் என்று அறிவியல் நிபுணர்
கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள
விதிகளின் கீழ் தொற்றாளர் மட்டுமன்றி
அவர்களுடன் தொடர்புடையவர்களும்
தங்களை முடக்கிக் கொண்டு தனித்தி
ருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
அதனால் பல லட்சம் தொற்றாளர்களும்
அவர்களோடு தொடர்பு வைத்திருந்த
மேலும் பல லட்சம் பேரும் பணிகளில்
இருந்து ஒதுங்கியிருக்க நேரிடும் என்
பதைக் கருத்தில் கொண்டே அதன்
பாதிப்பு “சமூகக் குழப்பமாக” (désorga
nisation de la société) மாறலாம் என்று
அறிவியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்
ளனர்.
தொற்றாளர்களும் தொடர்புடையோரும் பெரும் எண்ணிக்கையில் பணி விடுப்
பில் நிற்பது சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் தொற்றாளர்களோடு தொடர்புடையவர்களது (les cas contacts) தனிமைப்படுத்தல் காலப்பகுதியைக் குறைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பாரிஸ் இல்-து-பிரான்ஸ் பிராந்தியமே ஒமெக்ரோன் வைரஸ் திரிபின் மிக மோசமான தொற்றுப் பிடிக்குள் சிக்கியுள்ளது. ஒரு லட்சம்
குடியிருப்பாளர்களுக்கு ஆயிரத்து 157
பேர் என்ற வீதத்தில் அங்கு வைரஸ்
தொற்றுக்கள் எகிறியுள்ளன என்பதை
சுகாதாரப் பகுதி உறுதி செய்துள்ளது.
பிரான்ஸில் நாடளாவிய ரீதியில்
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது
முதல் இருந்திராத எண்ணிக்கையாக
91 ஆயிரத்து608 (91,608) தொற்றுக்கள்
கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்
ளன. இது அடுத்து வரும் நாட்களில்
பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
பல் வேறு துறைகளைச் சார்ந்த பணி
யாளர்கள் ஒரேசமயத்தில் அதிகம் பேர்
தனிமைப்படுத்தலில் முடங்குவது பொருள் விநியோகம், போக்குவரத்துப்
போன்ற அத்தியாவசிய சேவைகளில்
பாதிப்பை(impact sur le travail) ஏற்படுத்த
லாம். அது அண்மையில் இங்கிலாந்தில் ஏற்பட்டது போன்ற ஒரு நெருக்கடியைப் பிரான்ஸிலும் உருவாக்கலாம் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழிச் சொற்கள்)
குமாரதாஸன். பாரிஸ்.
23-12-2021