வெளிநாட்டுக் கைதிகளுக்காக
அங்கு வாடகைச் சிறைச்சாலை
டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.முதற் கட்ட
மாக 300 சிறை அறைகளை டென்மார்க்
கைதிகளுக்கு வழங்குவதற்கு கொசோ
வோ முன்வந்துள்ளது. அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறைகளுக்கு வாடகையாக டெனிஷ் அரசு வருடாந்தம்
15 மில்லியன் ஈரோக்களைக் வழங்கும்.
கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில்
இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொ
லைவில் Gjilan என்ற இடத்தில் அமைந்து
ள்ள சிறைக்குக் கைதிகளை அனுப்புவது
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து
ஆரம்பிக்கப்படும். கைதிகள் டென்மார்க் சிறைகளில் உள்ள அதே வசதிகளுடன்
அங்கு வைத்துப் பராமரிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்கன்டிநேவியன் நாடான டென்மார்க்
கைதிகளைப் பராமரிப்பதற்கான சிறை
வசதிகள் மற்றும் சிறைக் காவலர்கள்
பற்றாக்குறை காரணமாகப் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
சிறைகள் இடவசதியின்றி நிரம்பியுள்
ளன. நவீன வசதிகளுடன் புதிய சிறைச்
சாலைகளை அமைக்கும் வரை வெளி
நாட்டில் சிறைகளை வாடகைக்குப்
பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி
மேல் சிறைத் தண்டனை பெற்றால் அத்
தகையோர் கொசோவோ நாட்டில் உள்ள
சிறைகளுக்கு நாடுகடத்தப்பட்டு அங்கு
அடைக்கப்படுவார்கள்.டென்மார்க்கில் குற்றம் புரியும் வெளிநாட்டவர்களுக்கு இனி அந்த மண்ணில் இடமில்லை என்ற
செய்தியும் இதில் அடங்கியுள்ளது என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் கூறியிருக்கி
றார்.
கைதிகளை வாடகைச் சிறைகளில் தங்க
வைக்கின்ற இந்தத் திட்டத்துக்கு இரு
நாடுகளிலும் மனித உரிமை ஆர்வலர்கள்
மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
கைதிகளை அவர்களது உறவினர்களி
டம் இருந்து தொலைவில் வேறு நாட்டில்
அடைப்பது அவர்களது உரிமைகளை
மீறுவதாகக் குரல்கள் எழுந்துள்ளன.
ஆனால் ஐரோப்பாவில் இதுபோன்று
நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகள்
தங்களது கைதிகளை நெதர்லாந்தில்
உள்ள சிறைகளில் அடைத்துள்ளன.
டென்மார்க்கின் பயங்கரவாதக் கைதி
களுக்கும் தொற்று நோய்களால் பாதிக்
கப்பட்ட கைதிகளுக்கும் தமது சிறை
களில் இடமளிக்கப்படமாட்டாது என்று
கொசோவோ நாட்டின் நீதி அமைச்சர்
உறுதி அளித்துள்ளார். டென்மார்க்குட
னான வாடகைச் சிறை உடன்படிக்கை
க்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில்
இனிமேல்தான் ஒப்புதல் பெறவேண்டி உள்ளது.
கொசோவோ ஜரோப்பாவில் அண்மைக்
காலத்தில் உருவாகிய புதிய சுதந்திர தேசம் ஆகும். பிரிவினை கோரிய அல்
பேனிய இனத்தவருக்கும்(ethnic Albanian)
செர்பியப் படைகளுக்கும் (Serb forces)
இடையே 1998-1999 ஆண்டு காலப்பகு
தியில் ஏற்பட்ட கொடூர யுத்தம் நேட்டோ
நாடுகளது தலையீட்டை அடுத்து முடி
வுக்கு வந்தது. அதன் பின்பு ஒன்பது ஆண்டுகள் கழித்து 2008 இல் கோசோ
வோ செர்பியாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது. பெரும்பாலான நேட்டோ அணி நாடுகள் கோசோவோ
வின் இறைமையை ஏற்று அங்கீகரித்
துள்ள போதிலும் சேர்பியாவும்
அதன் நேச அணிகளான ரஷ்யா, சீனா
போன்ற நாடுகள் அதனை அங்கீகரிக்க
மறுத்து வருகின்றன.அதனால் அங்கு
எப்போதும் பதற்றமான அரசியல் நிலை நீடிக்கிறது.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்
22-12-2021