வவுனியா, நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் (15) முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த நபர் ஒருவர் அவர் மீது நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
31 வயதான சத்தியகலா என்ற பெண்ணே மரணமடைந்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெடுங்கேணி பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் உறவினரான 31 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இன்று (17) கைது நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்ய முற்பட்ட போது அவர் நஞ்சு மருந்தி அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக நோயாளர் காவு மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த இளைஞர் தோட்டத்தில் மறைந்து இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிசார் இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.