கெருடாவில் மேற்கு சின்னமலை பகுதி கடற்கரையில் இருந்து மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை(15) மாலை அப்பகுதியில் மனித எச்சங்கள் சில காணப்படுவதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. வடபகுதி கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இனம் தெரியாத 6 சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் குறித்த சடலங்களின் எச்சங்களே இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.