இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. தற்போது வாக்களிக்க வேண்டிய கடமை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல் நடைபெறுகின்றது.
இதேவேளை 19ஆவது அரசியல் சட்டத்திற்கு அமைவாக வாக்காளர்களை பாதுகாப்பதற்காக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தலையில் சுடுமாறு காவல்துறையினருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாக்காளர்கள் எந்த அச்சமும் இன்றி சுதந்திரமான வாக்களிக்கலாம் என்றும் வன்முறைகள் இடம்பெற நேர்ந்தால் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறினார்.
இதேவேளை பேஸ்புக் ஊடான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரசார கால எல்லை முடிவடைந்தபோதும் பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் ஊடான பிரசார நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தப் பிரசார நடவடிக்கையில் பெரும்பலான அரசியல்வாதிகள் ஈடுபடுபட்ட வருகின்றனர். இதேவேளை பிரசாரம் என்பதை தாண்டி சேறு பூசுதல் உள்ளிட்ட சகிக்க முடியாத நடவடிக்கைகளிலும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஆதரவாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் சூனிய காலப் பகுதியில் வாக்காளர்கள் தீர்மானம் எடுக்கும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேர்தலுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர 75ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை தேவையற்ற அசம்பாவிதங்களைத் தடுக்க காலையிலேயே வாக்குளிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.