மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் நேற்று (12) மதியம் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று (13) காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய தர்ஷன் எனத் தெரியவந்துள்ளது.
இதன் போது இன்று கோந்தைப்பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.