முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட கரைத்துறைப்பற்று கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வயற்காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு அப்பிரதேசத்தை சாராதவர்களுக்கு வழங்கப்படவுள்ள தாக அறியமுடிகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயல கத்தில் நேற்று இடம்பெற்ற, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதி மாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடை முறைப்படுத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
இக்காணிகள் கடந்த 1980 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுக்கு ஆதாரமாக காணி உத்தரவுப் பத்திரத்தை வைத்திருக்கின்றனர்.
அக்காணிகளை மீட்டுத்தருமாறு கோரி சுமார் 600 குடும்பங்கள் தமது காணிப்பிரச் சினை தொடர்பாக விண்ணப்பித்திருக்கின்றனர்.
இதற்கு எதுவித தீர்வும் அம்மக்களிற்கு பெற்றுக்கொடுக்கப்படாமல்; குறித்த பிரச் சினை தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்கவும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்றவர்களாக பதிவு செய்த 3000 தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக் கவும், சகல பிரதேச செயலாளர்களிற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் அனைத்து அறிக்கைகளும் இவ் வருட இறுதியில் காணி அமைச்சால் ஜக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளது எனவும் தகவலறிந்தவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற, கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற் காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்து மாறு மாகாண காணி ஆணையாளர் பிரதேச செயலாளர்களிற்கு மேற்படி உத்தரவிட்டுள் ளார் என்று அறிய முடிகின்றது.