தேசிய நலனை முன்னிறுத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுங்கள் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

0
162

jaffna-university-students-union-600x449பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 17.08.2015 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் கட்சி சார்பான அறிக்கைகள் எவையும் இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த சில தினங்களாக பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் மாணவர் ஒன்றியத்தின் பெயரைப் பயன்யடுத்திய அறிக்கைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதோடு அதை சில கட்சிகள் தமக்குச் சார்பான தேர்தல் பரப்புரைகளுக்காக பயன் படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை இருந்து வந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களைப் போல் எப்பொழுதும் தனித்துவமானதும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தியதுமான பக்கச்சார்பற்ற செயற்பாடுகளையே எமது ஒன்றியமும் முன்னெடுத்து வருகின்றது.

எனவே நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான போலியான அறிக்கை பரப்புரைகளை நம்பி மக்கள் குழப்பமடைய தேவையில்லை. கடந்த கால வரலாறுகளை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியத்தின் நலனை முன்னிறுத்தி தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து மக்களின் ஆணையை முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாக்களித்தல் என்பது எமது சனநாயக உரிமையாகும். அவ் உரிமையினை தமிழ் மக்களாகிய நாம் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. எமது ஒன்றியத்தின் ஓராண்டுக்குரிய பணிகள் மற்றும் செயற்பாடுகள் நிறைவடையும் காலப்பகுதியை அண்மித்துள்ள நிலையில் தற்போது நடப்பாண்டுக்குரிய பீடங்களின் தனித்தனி ஒன்றியங்களின் பிரதிநிதிகள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்துவத்திற்கான புதிய பிரதிநிதிகள் எவரும் இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்படவில்லை. இம்முறை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருக்குரிய பதவியானது மாணவர்களின் புரிந்துணர்வு அடிப்படையில் சுழற்சி முறையில் முகாமைத்துவ வணிக பீடத்திற்கே வழங்கப்படவுள்ளது.

எனவே உத்திபோகபூர்வமற்ற முறையில் ஊடகங்களிற்கு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை பொறுப் புடைமைமிக்க ஊடகங்கள் வெளியிடாது அதன் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிப்பது அவசிய மானதாகும்.

மேலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை பிரதி நித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் எவரும் அரசியல் கட்சி சார்பானவர்களாகவும் தமது தனிப்பட்ட நலன்களிற்காக மாணவர் ஒன்றியத்தின் பெயரைப் பயன்படுத்துவதுபவர்களாகவும் இருப்பது ஒன்றியத்தின் இதுவரை கால பாரம்பரியத்தை துஸ்பிரயோகம் செய்வதாகவே அமையும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகிறோம். –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here