மீசாலை புத்தூர்ச் சந்தியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார்.
மீசாலை வடக்கைச் சேர்ந்த, கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான கந்தசாமி சுதாஸ்கரன் (வயது -35 என்பவரே உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு உந்துருளியில் சென்ற ஆசிரியர், வீதியைக் கடப்பதற்காக உந்துருளியை நிறுத்திவிட்டு வீதியில் காத்திருந்தபோது, சாவகச்சேரி பகுதியிலிருந்து வேகமாக உந்துருளியில் வந்த இளைஞர் ஒருவர் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
இதன்போது, தலையின் பின்புறம் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில் 11 நாள்களின் பின்னர் நேற்று உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.