இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த உலங்குவானூர்தி விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

0
181

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த உலங்குவானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு உலங்குவானூர்திகள் புறப்பட்டுச் சென்றன. இந்த உலங்குவானூர்தியில் ஒன்று குன்னூர் அருகே வெடித்துச் சிதரி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய இந்த உலங்குவானூர்தியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த குறித்த இராணுவ உலங்குவானூர்தி விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

விபத்தில் சிக்கிய இராணுவ உலங்குவானூர்தியில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இறுதி நிலைவரப்படி,

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம்ஐ17 வி5 வகை இராணுவ உலங்குவானூர்தியில் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here