யாழில் த.தே.கூ காரியாலயம் மீது எறிகுண்டு தாக்குதல்!

0
132

mavai_blast_02யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிகாந்தா ஆகியோரது அலுவலகத்தின் மீது சிறிய ரக கை எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் மற்றும் பருத்தித்துறை வீதி நல்லூருக்கு அருகில் உள்ள சிறிகாந்தாவினுடைய அலுவலகம் மீதே தாக்குதல் மேற்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே, தாக்குதலை நடத்திசசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியவண்ணமே உள்ளன. நிலைமையை கட்டுப்படுத்த, பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here