கிளிநொச்சி பகுதியில் டிப்பர் வாகனம் தடம் புரண்டதில் 17 வயது சிறுவன் பரிதாப மரணம்!

0
95

கிளிநொச்சியில் வட்டக்கச்சி, புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளம்பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர் உந்துருளிகளில் துரத்திச் சென்றதாகவும், அதன் போதே டிப்பர் வாகனச் சாரதி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே நசியுண்டு உயிரிழந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன,

வாகனத்தில் சென்ற 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மற்றொரு இளைஞரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாகவே குறித்த யுவதியை சிலர் கடத்திச் சென்றதாகவும் அவர்களை யுவதியின் சகோதரன் உந்துருளியில் விரட்டிச் சென்ற வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here