பிரான்சில் தொற்று எண்ணிக்கை அதிக
ரித்து ஆஸ்பத்திரிகள் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆயினும் ஊரடங்கு மற்றும் பொது முடக்
கம் போன்ற கட்டுப்பாடுகளை உடனடி
யாக அறிவிக்க வேண்டிய நிலைமை இன்னும் எழவில்லை என்று பிரதமர்
ஜீன் காஸ்ரோ தெரிவித்திருக்கிறார்.
எலிஸே மாளிகையில் இன்று நடைபெ
ற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்ட
த்தில், நாட்டின் உணவகங்கள், அருந்த
கங்களில் புதிதாகக் கட்டுப்பாடுகளைக்
கொண்டுவருகின்ற தீர்மானம் எதுவும்
எடுக்கப்படவில்லை. தொற்றுப் பரவலை
குறைப்பதற்காகப் பாடசாலை விடுமுறை
யை நேரகாலத்துடன் அறிவிப்பது பற்றி
யும் விவாதிக்கப்படவில்லை. மாறாக பாடசாலைகளில் மாஸ்க் அணியும் விதி கள் இறுக்கப்பட்டுள்ளன.உணவகங்
களில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார விதிகள் அப்படியே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோவும்
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரனும்
இன்றிரவு செய்தியாளர் மாநாட்டில் சுகா
தார நிலைவரம் குறித்து விளக்கம் அளித்
தனர்.
நாட்டில் புதிய ஒமெக்ரோன் திரிபு 25
பேருக்குத் தொற்றியிருப்பதை சுகாதார
அமைச்சர் உறுதி செய்தார். சகல பகுதி
களிலும் சகல தரப்பினரிடையேயும்
தொற்று அதிகரித்து வருகிறது என்பதை
யும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டிகைக் காலப்பகுதியில் நெருக்க
மாக ஒன்று கூடிக் கொண்டாட்டங்களை
நடத்துவதைத் தவிர்க்குமாறு பிரதமர்
நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பிரதமரும் சுகாதார அமைச்சரும் அறிவித்த முக்கிய விதிகள் வருமாறு :
🔵இரவுக் கேளிக்கை விடுதிகள் (discotheques) அனைத்தும் மீண்டும்
வெள்ளிக்கிழமை முதல் நான்கு வாரங்க
ளுக்கு மூடப்படுகின்றன.
🔵65 வயதுக்கு மேற்பட்ட எவரும் முன்
பதிவுகள் இன்றி விரும்பிய நிலையங்
களில் சென்று தடுப்பூசி ஏற்றிக் கொள்ள
முடியும்.
🔵பாடசாலைகளில் சுகாதார விதிமுறை
கள் தர நிலை 3 க்கு (level 3) உயர்த்தப்
படுகின்றன. அதன்படி மாணவர்களும்
ஆசிரியர்களும் வகுப்பறைக்கு உள்ளே
யும் வெளியேயும் மாஸ்க் அணிவது வியாழக்கிழமை முதல் (டிசெ.9) கட்டாய
மாக்கப்படுகிறது.
🔵பணியாளர்கள் வாரத்தில் 2-3 நாட்கள்
வீட்டில் இருந்து பணிபுரிய(teleworking)
அனுமதிக்குமாறு சகல தொழில் நிறுவ
னங்களும் கேட்கப்பட்டுள்ளன.
🔵5-11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்க
ளுக்குத் தடுப்பூசி ஏற்றும் பணியை அரசு
இம் மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கும்.
குமாரதாஸன். பாரிஸ்.
06-12-2021