முல்லைக் கடலில் காணாமல்போன ஏனைய இருவரின் உடலங்களும் மீட்பு!

0
188

முல்லைத்தீவு கடலில் கடல்குளிப்பில் ஈடுபட்ட மூவர் காணாமல் போன நிலையில் இரண்டு பேரின் சடலம் மீட்கப்பட நிலையில் தற்போது மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்படுள்ளது,

முல்லைத்தீவு சுற்றுலாகடற்கரையில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
வவுனியாவில் இருந்து வாகனத்தில் வருகைதந்த பெண் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரில் மூன்று இளைஞர்களும் கடலில் கடற்குளிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்,

இதன்போது மூவரும் மூழ்கிக்கொண்டு செல்வதை அவதானித்த அவர்களுடன சென்ற யுவதி அருகில் இருந்தவர்களுக்கு சொல்லி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து கடற்கரையில் கூடிய மக்கள் கடலில் மூழ்கியவர்களை கரையில் நின்று தேடியுள்ளார்கள்.

இதன் போது வவுனியா மதகுவைத்தகுளம் 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா மதவுவைத்தகுளத்தினை சேர்ந்த 26 வயதுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல் போயுள்ள நிலையில்சுமார் ஒரு மணிநேரம் கடந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிவலிங்கம் சகிலன் என்பவரின் சடலம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது..

மேலும் இன்று காலை 3 பேரில் மனோகரன் தனுசன் என்பவருடைய சடலம் தீர்த்தக்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தற்போது நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மூன்றாவது நபரின் சடலம் (விஜயகுமாரன் தர்சன்) செம்மலை-அளம்பில் கடற்கரையில் மீட்கப்படுள்ளது,

மீட்கப்பட்ட மூன்று உடல்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மீனவர்களின் உதவியால் தான் இந்தத் தேடும்பணி மேற்கொண்டு உடல்களை கண்டுபிடித்துள்ளார்கள்,

வவுனியாவில் இருந்து வாகனம் ஒன்றில் இவர்கள் நால்வரும் முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்து கடற்குழியலில் ஈடுபட்ட வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here