வடமராட்சி, பருத்தித்துறை கோவளம் பகுதியிலும், மருதங்கேணி சுண்டிக்குளம் கடற்கரையிலும் உருக்குலைந்த நிலையில் ஒவ்வொரு சடலங்கள் நேற்றுக் கரையொதுங்கின.
வடமராட்சி பகுதியில் மணல்காடு மருதங்கேணி பகுதிகளில் ஒருவாரத்தில் இவ்வாறு 4 சடலங்கள் கரை ஒதுங்கியநிலையில், மேலும் இரு சடலங்கள் நேற்று ஒதுங்கியுள்ளன. இதன்படி இதுவரை அடையாளம் தெரியாத நபர்களின் 6 சடலங்கள் ஒதுங்கியுள்ளன.
பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.