முல்லைத்தீவு ஒதியமலை படுகொலைகளின் 37ம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.
பல தடைகளுக்கு மத்தியிலும் படுகொலைசெய்யப்பட்டோரின் உறவுகள் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர்.
02.12.1984 அன்று அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.
இதில் 27 அப்பாவித் தமிழ் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், ஐந்து பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்.