முதலாவது ஒமெக்ரோன் தொற்று பாரிஸ் பிராந்தியத்தில் அறிவிப்பு!

0
472


பாரிஸ் பிராந்தியத்தில் முதலாவது ஒமெக்ரோன் தொற்றாளர் அடையாளப்
படுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்
படுகிறது. நைஜீரியா சென்று திரும்பி வந்து பாரிஸின் புறநகர்ப் பகுதியான
Seine-et-Marne இல் தங்கியிருந்த ஒரு
வருக்கே ஒமெக்ரோன் தொற்று உறுதிப்
படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பெருநிலப் பரப்பில் அடை
யாளம் காணப்பட்ட முதலாவது தொற்றா
ளர் இவரே என்று பிராந்திய சுகாதாரப்
பணியகம் (ARS Île-de-France) தெரிவித்
திருக்கிறது. 50-60 வயதுக்கு இடைப்பட்ட
அந்த நபர் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி
நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம்
பாரிஸ் திரும்பியிருந்தார். அவரது மனை
விக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அது ஒமெக்ரோன் வைரஸ் தொற்றா என்பது
இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள
னர்.

இதற்கு முன்னர் கடல் கடந்த நிர்வாகப்
பிராந்தியமான ரியூனியன் (Reunion)
தீவில் 53 வயதுடைய ஒருவருக்கு ஒமெ
க்ரோன் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டி
ருந்தது. புதிய ஒமெக்ரோன் திரிபு தொற்
றாளர்கள் என்ற சந்தேகத்தில் 13 பேரது
மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்
ளன என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் ஏற்கனவே தெரிவித்
திருந்தார்.

இதேவேளை, பிரான்ஸில் ஏனைய
கோவிட் திரிபுகளின் தொற்றுக்கள்
உச்ச அளவை எட்டியுள்ளன. நேற்று
மாலையுடன் முடிவடைந்த 24 மணி
நேரத்தில் பதிவாகிய தொற்றுக்களின்
எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
02-12-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here