முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஆரம்பமானது.
நேற்று மாவீரர் நாளில் ஊடகவியலாளர் விசுவலிங்கம் விசுவச்சந்திரன் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தாக்கிய இராணுவத்தை கைது செய்ய வலியுறுத்தியுமே குறித்த கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.