இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கட்டிகை (கேக்) கொடுத்து கொண்டாட்டத்தில் எம். கே. சிவாஜிலிங்கம் அவர்கள் ஈடுபட்டார்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்து மகிழ்ந்தார்.
இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கட்டிகையை அங்கு தரித்திருந்தவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.