பத்திரிகை உலகம் ஒரு சிறந்த ஊடகவியலாளரை இழந்து விட்டது!

0
155

பத்திரிகை உலகம் ஒரு சிறந்த ஊடகவியலாளரை இழந்து விட்டது. ஓர் உண்மையான அறிவாளியை இழந்துவிட்டது என்று, கலாபூஷணம் இராசையா ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரின் மறைவு குறித்து அவர் அனுப்பிய இரங்கல் செய்தியில்,
‘உதயன்’ பத்திரிகையை ஆரம்பித்த ஆசான் எமது அன்புக்குரிய ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் மறைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ‘இமயம் சரிந்தது! பண்பின் சிகரம் மறைந்தது’’ இனி என் செய்வோம்?
சிறியேன் ஓர் எழுத்தாளனாகவும் ஆன்மீகப் பேச்சாளனாகவும் விளங்குவதற்கு அடி அத்திபாரம் இட்டவர் கானமயில்நாதனே ஆவார். அவருடைய அமைதியான பேச்சும் சாந்தமான தோற்றமும் என் நெஞ்சைவிட்டு அகலாது.
‘உதயன்’ ஒளி விட்டுப் பிரகாசிக்க வழி வகுத்தவர் ஆசிரியர் என்று கூறின் மிகையாகாது.

எல்லோரிடமும் பரிவும் பாசமும் காட்டுகின்ற ‘உதயன்’ஆசிரியர் மறைந்தது நாம் செய்த துர்ப்பாக்கியமே! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல யாழ்.வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமானின் பொற்கமலபாதம் பணிந்து பிரார்த்தித்து நிற்கின்றேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here