பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் சிறப்பாக நடாத்தப்பட்டது. நவம்பர் 20,21 ஆகிய இரு நாட்களும் இணைய வழியில் நடாத்தப்பெற்ற இந்தத் திறனறிதலில் சர்வதேசரீதியாக 756 பேர் பங்கு பற்றியிருந்தனர்.
தாயகம்,கனடா,நியூசலாந்து, ,நெதர்லாந்து , கங்கேரி, அவுஸ்திரேலியா,அமெரிக்கா, ஜேர்மனி, சுவிசு, நோர்வே, இத்தாலி, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா ஆபிரிக்க நாடு, கொங்கோ போன்ற நாடுகளிலிருந்து பலர் பங்கு கொண்டிருந்தனர்.
இதில் பொது மக்கள் 614 பேரும், தமிழ்ச்சோலையில் பயிலும் வளர்தமிழ் 10,11,12 மாணவர்கள் 112 பேரும், ஆசிரியர்கள் ( தமிழ்ச்சோலைகள்) மற்றும் தனியார் 63, பேரும், தமிழ்ச்சோலை தமிழியல் பட்டக மாணவர்கள் 79 பேரும் பங்கேற்றனர். இதில் 98.6 வீதமானோர் தேர்ச்சி பெற்றதுடன் அதற்கான சான்றிதழ்களையும் மின்னஞ்சல் மூலம் உடனே பெற்றிருக்கின்றனர்.
இந்தத்திறனறிதல் தொடர்பாக பங்கு பற்றியவர்களுடன் வினவிய வேளை, தமக்கு மிகவும் பயனுள்ளதாகவும், எம்மைப்பற்றிய, எமது இனத்தைப்பற்றியும், மொழியைப்பற்றியும், எமது தேசத்தின் விடுதலை மற்றைய இனங்களைப்போல் எவ்வளவு அவசியமானது என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது என்றும், இதுபோல் ஒவ்வோர் ஆண்டு வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் இளையோர்கள் நாங்கள் எம்மை தேசப்பற்றுடன் வளர்த்துச் செல்ல நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிின்றோம் என்றும் இளையவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி :ஊடகப்பிரிவு – பிரான்சு)