அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல்!

0
239

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021

விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம் , நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம் , தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம் , இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள் .

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் .

மாவீரர் பணிமனை , அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகள் .

21.11.2021 அன்பார்ந்த தமிழீழ மக்களே ! எமது தேசத்தின் உன்னதர்களான மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள் . மாவீரர் நாளாகும் . உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதிக்கணம் வரை நெஞ்சுரத்தோடு போராடி மண்ணை முத்தமிட்ட மானமறவர்களை நெஞ்சப்பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள் . எமது எமது வீர விடுதலைவரலாறு , எம் மாவீரர்களின் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டது . சோதனை மிகுந்த காலகட்டங்களில் , பெரும் மலையாக நின்று வைத்து , வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் மாவீரர்களே . இரத்தத்தாலும் வியர்வையாலும் நெருக்கடியான வரலாற்றுக் எம்மைத் தலைநிமிர பெற்றுத்தந்தவர்கள் எமது தடைகளைத் தகர்த்து தலைமுறை தலைமுறையாக எமது இதயக்கோயிலில் வைத்துப் பூசிக்கவேண்டியவர்கள் எம் மாவீரர்கள் . இம்மாவீரர்களை விடுதலைப்போருக்கு உவந்தளித்த பெற்றோர்களே . உரித்துடையோர்களே உங்களைப் போற்றி , பேரன்புடன் பற்றிக்கொள்ளும் இந்நாளில் மாவீரர்களுக்கு மலர்தூவி நெய்விளக்கேற்றி வணங்கிட உங்கள் வாழிட நாடுகளில் மாவீரர் நாளுக்கான மாவீரர் மண்டபங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது . எமது விடுதலைக்காக முதல் வித்தாகிய லெப்.சங்கர் அவர்களின் வீரச்சாவடைந்த நாளாகிய நவம்பர் 27 ஐ தேசிய மாவீரர் நாளாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் 1989 இல் பிரகடனப்படுத்தியிருந்தார் . அந்நாளையே தமிழர்கள் கனத்த இதயங்களுடன் மாவீரர்நாளாக நினைவுகூர்ந்து மாவீரர்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்களை அழித்தும் , உறவுகள் மாவீரர்களுக்குச் சுடரேற்றி நினைவேந்துவதைத் தடுப்பதன் மூலமும் தமிழர்கள் நெஞ்சில் நீறுபூத்து நிற்கும் நெருப்பை அணைத்துவிடலாம் என சிங்கள அரசு நப்பாசை கொண்டுள்ளது . உலகெங்கும் வாழும் வருகின்றார்கள் . இந்த தமிழர்களின் ஓர்மத்தையும் போர்க்குணத்தையும் இந்நாள் கூர்மைப்படுத்துவது சிங்கள அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்திவருவதாலேயே . புலம்பெயர் தேசத்திலும் தமிழ்தேசியக் கட்டமைப்புக்களைச் சிதைத்து மாவீரர்நாளைக் குழப்பத் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றது . எந்த இடர்வரினும் நாம் ஒன்றுபட்ட சக்தியாக தொடர்ந்தும் இந்நாளில் மாவீரர்களை நினைவுகூர்ந்து எமது இலட்சியப் பாதையில் பயணிப்போம் . மாவீரர் பணிமனை , அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகள் . சத்திய இலட்சியத்தில் பற்றுறுதி கொண்ட மக்களாக ஒன்று திரண்டு நிற்பதால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அழிக்கவோ , அசைக்கவோ முடியாது . விடுதலை வேண்டிநிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலிமைமிக்க பேராயுதம் . இன்று மாவீரர்களின் கல்லறைகள் சிதைக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் இலட்சியங்கள் எமது நெஞ்சங்களில் அழிக்கமுடியா இடத்தில் இருந்து எம்மை வழிநடத்தும் என்பது உறுதி .

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here