கார்த்திகை தீபம் ஏற்றியோருக்கு முல்லையில் சிறிலங்கா படைகளால் அச்சுறுத்தல்!

0
237

கார்த்திகை தீபத்திருநாளான நேற்று வீடுகளில் தீபங்கள் ஏற்றியவர்களை முல்லைத்தீவு இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரித்ததுடன் மிரட்டியும் – சென்றனர் என்று தெரியவருகின்றது . துன்பங்கள் விலகி – செல்வம் பெருக இந்துமதத்தை பின்பற்றும் தமிழ் மக்கள் கார்த்திகை தீபத் திரு நாளில் தீபங்கள் ஏற்றி கொண்டாடுவது வழமை . தீபத் திருநாளான நேற்று வழக்கம் போன்று மாலை 6 மணி முதல் வீடுகளில் தீபங்களை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடினர் .

இந்த நிலையில் , முல்லைத்தீவு இராணுவத்தினரும் , இராணுவ புல னாய்வு பிரிவினரும் தீபம் ஏற்றியவர்களின் வீடுகளுக்கு சென்று தீபங்கள் ஏற்றியமை தொடர்பில் விசாரித்தனர் . அத்துடன் , புலிகளை நினைவேந்தும் விதத்தில் எந்த நிகழ்வுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துச் சென்றனர் .

தமிழீழ மாவீரர் நாள் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் அதனை நினைவுகூர அனு மதிக்கக்கூடாது என்று கோரி நீதிமன்றங் கள் மூலம் தடையுத்தரவுகள் வழங்கப் பட்டு வரும் நிலையிலேயே இந்தக் குழப்பம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here