இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பஞ்சங்கிரா மாவட்டத்தில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு போயினர். மீட்பு பணியின்போது மண்ணில் புதையுண்டிருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. எஞ்சியோரை மீட்கும் பணி தொடருகிறது.