புனிதர்களின் துயிலுமில்லம்
விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.
உள்ளுறங்கும் பிள்ளைகளின்
வாய்கள் பேசுவது காதுவிழும்.
பள்ளிகொள்வோர் எம்மைப்
பார்ப்பதையும் விழியுணரும்.
நாமழுதால் சிரிக்குமொலி
நாற்திசையும் எதிரொலிக்கும்.
தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச்
சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.
பூச்சொரிந்து,
நெய்விளக்கில் பொறியேற்றி,
விழிசொரிந்து,
கார்த்திகையில் அந்நாள் கலங்கி,
வெளியில்வர பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ…!!!
(புதுவை இரத்தினதுரை)